search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் வரி"

    சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். #DonaldTrump #USTariff
    வாஷிங்டன்:

    உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    கடந்த மாதம்கூட, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா  கூடுதல் வரி விதித்தது.



    இந்த நிலையில், மேலும் 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது அமெரிக்கா. இதற்கான அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 24-ம் தேதி முதல் இந்த புதிய வரிவிதிப்பு அமலுக்கு வரும் எனவும், ஜனவரியில் இருந்து வரிவிதிப்பு 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

    மேலும், சீனா தனது நியாயமற்ற வர்த்தகத்தை தொடர்ந்து பின்பற்றுவதாகவும் தெரிவித்த டிரம்ப், இந்த வரிவிதிப்புக்கு பதில் நடவடிக்கையாக எங்களின் விவசாய பொருட்கள், தொழில்பொருட்கள் ஆகியவற்றுக்கு சீனாவும் கூடுதல் வரி விதிக்குமேயானால், நாங்கள் மூன்றாவது கட்டமாக சீன பொருட்களுக்கு வரியை கூட்டுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    கூடுதல் வரி விதிப்பு பட்டியலில் இணைய தொழில்நுட்ப தயாரிப்புகள், மின்னணு பொருட்கள், நுகர்வோர் பயன்பாட்டுப்பொருட்கள், சீன கடல் உணவுகள், மரச்சாமான்கள், விளக்குகள், டயர்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சைக்கிள்கள், கார் இருக்கைகள் இடம் பெற்றுள்ளன. #DonaldTrump #USTariff
    மேலும் ரூ.14 லட்சம் கோடி சீனப்பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. #DonaldTrump #ChinaTariffs
    வாஷிங்டன்:

    உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அது வர்த்தக போராக மாறி உள்ளது.

    சீனா தனது அறிவுசார் சொத்துக்களை திருடுவதாகவும், தொழில் நுட்பங்களை தன் நாட்டுக்கு மாற்றிக்கொண்டு வருவதாகவும் அமெரிக்கா புகார் கூறுகிறது. சீனா தொடர்ந்து இந்தப் புகாரை மறுத்து வருகிறது.

    ஆனாலும்கூட, சீனாவால் தங்களுக்கு ஏற்படுகிற வர்த்தக பற்றாக்குறையை சரிகட்டுவதற்கு, அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்து செயல்படுத்தி வருகிறது.



    தொடர்ந்து சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    கடந்த மாதம்கூட, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா அதிரடியாக கூடுதல் வரி விதித்தது.

    இந்த நிலையில், மேலும் 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கூடுதல் வரி விதிப்பு பட்டியலில் இணைய தொழில்நுட்ப தயாரிப்புகள், மின்னணு பொருட்கள், நுகர்வோர் பயன்பாட்டுப்பொருட்கள், சீன கடல் உணவுகள், மரச்சாமான்கள், விளக்குகள், டயர்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சைக்கிள்கள், கார் இருக்கைகள் இடம் பெறும் என தெரிய வந்து உள்ளது.

    இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் லிண்ட்சே வால்டர்ஸ் கூறும்போது, “சீனாவின் நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கைகளை ஈடுகட்டுவதற்கு தானும், தனது நிர்வாகமும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி டிரம்ப் தெளிவுபடுத்தி உள்ளார். அமெரிக்கா நீண்ட காலமாக எழுப்பி வருகிற பிரச்சினைகளை சீனா கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டார்.

    அமெரிக்க கருவூல மந்திரி ஸ்டீவன் மனுசின், சீனாவுடனான வர்த்தக பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும்கூட, சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு டிரம்ப் தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.

    மேலும் சீனாவின் 267 பில்லியன் டாலர் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் கடந்த 7-ந் தேதி எச்சரித்து இருந்தது நினைவுகூரத்தக்கது.  #DonaldTrump #ChinaTariffs
    அமெரிக்காவில் இருந்து துருக்கியில் இறக்குமதி செய்யப்படுகிற கார்கள், மதுபானங்கள், புகையிலை மீதான வரியை உயர்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #Turkey #Import
    அங்காரா:

    துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. துருக்கியில் உளவு வேலையில் ஈடுபடுவதாகக் கூறி அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவரை கைது செய்து அந்த நாட்டு அரசு சிறையில் அடைத்து உள்ளது.

    அவரை நாடு கடத்துமாறு அமெரிக்கா விடுத்து உள்ள கோரிக்கையை துருக்கி நிராகரித்து விட்டது. இது அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதன்காரணமாக துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு மற்றும் அலுமினியம் மீது 2 மடங்கு வரி விதித்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக துருக்கியின் நாணய மதிப்பு வெகுவாக சரிந்து உள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் துருக்கி அதிபர் எர்டோகன், அமெரிக்காவில் இருந்து துருக்கியில் இறக்குமதி செய்யப்படுகிற கார்கள் மீதான வரியை 120 சதவீதமாகவும், மதுபானங்கள் மீதான வரியை 140 சதவீதமாகவும், புகையிலை மீதான வரியை 60 சதவீதமாகவும் உயர்த்தி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

    துருக்கி பொருளாதாரத்தின்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு, பதிலடி கொடுக்கிற விதத்தில் இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக துருக்கி துணை அதிபர் புவாட் ஒக்டாய் கூறினார்.

    அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற அரிசி, அழகு சாதனப் பொருட்கள், நிலக்கரி ஆகியவற்றின்மீதும் துருக்கி கூடுதல் வரி விதித்து உத்தரவு போட்டு உள்ளது. 
    சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இதுவரை இல்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 பில்லியன் அமெரிக்க டாலர்(சுமார் ரூ.32,500 கோடி) அளவிற்கு தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்ப பொருட்களின் மீது 25 சதவீத கூடுதல் வரி விதிப்பதாக கடந்த மாத மத்தியில் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும், அமெரிக்காவில் இருந்து தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் 545 முக்கிய பொருட்களுக்கு 34 பில்லியன் டாலர்கள் அளவிற்கு கூடுதல் வரியை விதித்தது. இதையடுத்து டிரம்ப், சீன பொருட்களுக்கு மேலும் 200 பில்லியன் டாலர்கள் மதிப்பில் கூடுதல் வரியை அண்மையில் சீன பொருட்களுக்கு விதித்தார். இதற்கு சீனாவும் தக்க பதிலடி கொடுத்தது.

    இந்த நிலையில், டிரம்ப் அமெரிக்காவின் ‘பாக்ஸ்’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இந்த விஷயத்தில் சீனா உடன்பாடு காண விரும்பினால் அதுபோல் அமெரிக்காவும் நடந்துகொள்ளும். ஆனால் இது அமெரிக்காவுக்கு நியாயம் கிடைக்கும் உடன்பாடாக இருக்கவேண்டும். இல்லையென்றால் சீனப் பொருட்கள் மீதான கூடுதல் வரியை அமெரிக்காவால் 500 பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்க இயலும். அதே நேரம் சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இதுவரை இல்லை” என்றார். 
    ×